🔔 Stay Updated!

📣 தினசரி TNPSC வினாக்கள் உடனே தெரிந்துக்க! 🔔 Enable செய்யுங்கள்.

Science உணவியல் – TNPSC PYQ முக்கிய குறிப்புகள்

2020–2025 வரை கேட்கப்பட்ட உணவியல் தொடர்பான முக்கிய Points

🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS

nutrition TNPSC Important Points — உணவியல் குறித்து தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:

  • இன்சுலினை முதன் முதலாக கண்டறிந்தவர்கள் பேண்டிங் மற்றும் பெஸ்ட் ஆவர்.
  • இரந்த சோகை, குறைவான எடை இவை ஊட்டச்சத்து மற்றும் சுகாதார குறைவினால் ஏற்படும் விளைவு ஆகும்.
  • உடலின் இயல்பான சகிப்புத் தன்மை குறைந்து, நோயெதிர்ப்பு அமைப்பு உடலின் சொந்த திசுக்களை "சுயமாக" அங்கீகரிக்கத் தவறினால் இந்த நோய் உருவாகிறது. இது தன்னுடல் தாக்கு நோய் ஆகும்.
  • தைராய்டு சுரப்பியில் அதிகமாக செறிவூட்டப்படும் தனிமம் ஐயோடின் ஆகும்.
  • நோய் தடுப்பாற்றல் உடலின் சொந்த செல்கள் மற்றும் திசுகளை தாக்கும் நிலை இது பொதுவாக உடல் சுய ஆன்டிஜெனுக்கு எதிரான சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், சகிப்புத் தன்மை தோல்வியடைகிறது அல்லது சுய ஆன்டிஜெனுக்கு எதிராக முழுமையடையாது. இது டி லிம்போசைட்டுகள் அல்லது பி லிம்போசைட்டுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
  • உண்ணா நிலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு <110 mg/dL இருத்தல் நல்லது.
  • பப்பாளி இலைகளின் கொழுந்திலிருந்து எடுக்கப்பட்டு வடிகட்டப்பட்ட திரவம் மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவை டெங்கு நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இது இரத்தத்தில் இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
  • உலகில் இந்திய நாடு முதன்முதலாக 100 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கை அடைந்தது.
  • கிளாஸ்டிரிடியம் போட்டுலினம், பாக்டீரியம் உணவை நஞ்சாக்குவதில் பங்கு பெறுகிறது.
  • ஹிருடினேரியா கிரானுலோசா, என்னும் விலங்குகளில் உமிழ்நீரில் உள்ள வேதிப் பொருளானது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • நமது உணவின் முக்கிய பகுதியாகவும் மேலும் நோய் தொற்றினை எதிர்த்து போராட உதவி செய்வதும் புரதம் ஆகும்.
  • போலியோவிற்க்கான தடுப்பூசி மந்தமாக்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்து மற்றும் வாய்வழி போலியோ தடுப்பு மருந்து ஆகும்.

Disclosure: As an Amazon Associate, we earn from qualifying purchases.