🔔 Stay Updated!

📣 தினசரி TNPSC வினாக்கள் உடனே தெரிந்துக்க! 🔔 Enable செய்யுங்கள்.

INM ஜவஹர்லால் நேரு – TNPSC PYQ முக்கிய குறிப்புகள்

2020–2025 வரை கேட்கப்பட்ட ஜவஹர்லால் நேரு தொடர்பான முக்கிய புள்ளிகள்

🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS

Jawaharlal_Nehru TNPSC Important Points — ஜவஹர்லால் நேரு பங்களிப்பு குறித்து தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:

  • பிப்ரவரி 1937 இல் பொதுத் தேர்தல் நடந்தபோது, ஜவஹர்லால் நேரு நாடு முழுவதும் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸின் செய்தியை எங்கும் கொண்டு சென்றார்.
  • ஜவஹர்லால் நேருவின் படைப்பு: “ஒரு சுயசரிதை”, “உலக வரலாற்றின் பார்வை.”
  • நேரு தீவிர அரசியலில் ஈடுபட காரணமான முக்கிய நிகழ்ச்சி ஜாலியன் வாலாபாக் துயரம்.
  • நேரு ஆட்சிக்காலம் நவீன அறிவியல் வளர்ச்சியின் பொற்காலம் ஆகும்.அணு ஆராய்ச்சிகள், விண்வெளி ஆராய்ச்சிகள் போன்றவை இவராலே உருவாக்கப்பட்டவை.
  • ஆராய்ந்து பார்த்தால், அக்பரை இந்திய தேசியத்தின் தந்தையாகக் கருத வேண்டும். அவருடைய காலத்தில் தேசப்பற்று குறைவாகவும், மதம் நாட்டைப் பிளவுபடுத்தும் சக்தியாகவும் இருந்தது. அக்பர் மதப் பிரிவினைவாதங்களைக் களைந்து, அந்த இடத்தில் இந்திய தேசியம் என்ற முன்னோடியான பொது மனப்பான்மையை முன்வைத்தார்" என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு.
  • பூர்ண ஸ்வராஜ் 26 ஜனவரி 1930 ல் அறிவிக்கப்பட்டது.
  • "அவர் ஒரு பயமில்லாத, குற்றச்சாட்டு இல்லாத போர்வீரர் போன்றவர். தேசியம் அவர் கைகளில் பாதுகாப்பாக உள்ளது." காந்திஜியின் இந்த கூற்று ஜவஹர்லால் நேருவை குறிக்கிறது.
  • இந்தியாவின் தேசியத் தலைவர் ஜவஹர்லால் நேரு 27 மே.1964-ல் இறந்தார்.
  • ஜவஹர்லாலின் இறப்பு இந்தியா மட்டுமல்லாது ஒட்டு மொத்த மனித சமுதாயம், ஓர் ஒப்பற்ற இராஜ தந்திரியை இழந்ததும் அவர் சுதந்திரத்திற்கான போராட்டத்திலும் மற்றும் உலகளாவிய புரிதலுக்காக பெரிதும் மதிக்கப்பட்டவர். - Dr. ஹென்ரிக் லுபாக்.
  • 'இந்தியாவின் ஜவஹாலால் நேரு மக்கள் மனத்தில் சமயச்சார்பின்மை என்ற கருத்தினைப் பதித்தார்.
  • புகழ் பெற்ற மேற்கோளான" நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் விதியுடன் முயற்சி செய்தோம்" ஜவஹர்லால் நேரு வழங்கப்பட்டது.
  • ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிக்கை நேஷனல் ஹெரால்டு.
  • அகமதுநகர் கோட்டை சிறையில் நேருவால் 'தி டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகம் எழுதப்பட்டது.
  • உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு நேரத்திலே, இந்தியா தன்னுடைய உயிரோட்டத்தோடும் மற்றும் சுதந்திர உணர்வுடனும் விழித்துக்கொள்கிறது என கூறியவர் ஜவஹர்லால் நேரு.
  • ஜவஹர்லால் நேரு தொடங்கிய செய்திதாளின் பெயர் நேஷனல் ஹெரால்ட்.
  • 1929 லாகூர் காங்கிரஸ் அமர்வில் முழு சுதந்திரத்தை (பூர்ண ஸ்வராஜ்) தனது குறிக்கோளாக அறிவித்தது.
  • "இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர் ஜவஹர்லால் நேரு.
  • அகில இந்திய மாநில இடதுசாரிகளின் மக்கள் மாநாடு நடைபெற்ற ஆண்டு 1936.
  • “சர்கார்” நேருவின் குடும்பப் பெயர் ஆகும்
  • இந்திய தேசிய காங்கிரஸ் 1929 ஆண்டு லாகூர் அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க 'பூர்ண சுயராஜ்' அறிக்கையை வெளியிட்டது.
  • பிரிட்டிஷ் அலுவலர்கள் ஜவஹர்லால் நேருவை "கம்யூனிசத்தின் தலைமை குரு" என்று அழைத்தனர்.
  • நேரு மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கையை எதிர்த்தார்.மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கை 5% க்கு குறைவான இந்திய பிரதிநிதித்துவம் அளித்தது.
  • 'அறிவியல் தாக்கம்' என்ற சொல்லினைப் பயன்படுத்தியவர் நேரு 'கண்டறிந்த இந்தியா'.

Disclosure: As an Amazon Associate, we earn from qualifying purchases.